காஞ்சீபுரம் மாநகராட்சி ஏழுமலை நகரில் அமைக்கப்பட்டுள்ள பூங்கா பராமரிப்பின்றி, புதர்மண்டிய நிலையில் உள்ளது. இதனால் அந்த பூங்கா பல மாதங்களாக பயன்பாட்டில் இல்லாமல் பூட்டிய நிலையிலேயே இருந்து வருகிறது. இந்த பூங்காவை சீரமைத்து மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரவேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.