காஞ்சீபுரம் மாவட்டம் கொளப்பாக்கம் பகுதியில் மழைநீர் கால்வாய் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. சாமியார் குளம் பகுதியில் டிரான்ஸ்பார்மர் இருப்பதால் அந்த பகுதியில் மழை நீர் கால்வாய் அமைக்கும் பணி கடந்த ஒன்றரை ஆண்டுகளாக கிடப்பில் போடப்பட்டுள்ளது. டிரான்ஸ்பார்மரை அகற்றினால் மட்டுமே கால்வாய் பணியை தொடர முடியும். மின்சார வாரியம் நடவடிக்கை எடுத்து டிரான்ஸ்பார்மரை அகற்ற வழி செய்ய வேண்டும்.