திருவள்ளூர் மாவட்டம் திருவாலங்காடு பகுதியில் உள்ள லட்சுமாபுரம் ஊராட்சியில் நியாயவிலை கடை இல்லை. அரசுக்கு பல்வேறு முறையில் முறையிட்டும் தீர்வு கிடைத்தபாடில்லை. அதனால் அந்த பகுதி மக்கள் அனைவரும் தங்கள் சொந்த செலவிலேயே நியாய விலை கடை கட்டி விடுகிறார்கள். அரசு உதவி செய்தால் பொது மக்களின் பாரம் குறையும்.