விரட்டி விரட்டி கடிக்கும் நாய்

Update: 2022-08-23 14:45 GMT

மாவட்ட தலைநகராக விளங்கும் திருவள்ளூர் கலெக்டர் அலுவலகத்தில் நாள்தோறும் 1000-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் பல்வேறு கோரிக்கைகளை தெரிவிக்க வந்து செல்கின்றனர். இந்த நிலையில் கலெக்டர் அலுவலகத்தில் அதிகமான நாய்கள் கூட்டம் கூட்டமாக சுற்றுகிறது. அந்த நாய்கள் கடந்த 2 நாட்களில் மட்டும் கலெக்டர் அலுவலகத்திற்கு வந்த 5 பேரை கடித்து உள்ளது. மேலும் அவ்வழியாக வருவோரை நாய் விரட்டி செல்வது பொன்ற செயல்களில் ஈடுபடுகிறது. பிரச்சினை தீர வழி என்னவோ?

மேலும் செய்திகள்