பெரியகளக்காட்டூர் கிராமத்தில் அரசு ஆதி திராவிட நல உயர்நிலைப்பள்ளி கட்டிடம் பழுதடைந்து உள்ளது. இதனால் பள்ளிக்கூடமானது மாணவர்கள் தங்கும் விடுதியில் செயல்பட்டு வருகிறது. உயர்நிலைப் பள்ளியில் சுமார் 110 மாணவ மாணவிகள் கல்வி கற்று வருகிறார்கள். இந்தப் பள்ளியில் 6-வது முதல் 10-வது வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு கல்வி கற்பிக்க 3 ஆசிரியர்கள் மட்டுமே இருக்கிறார்கள். எனவே ஆசிரியர் பற்றாக்குறைக்கு நிரந்தர தீர்வு காண வேண்டும்.