செங்குன்றம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளான பாடியநல்லூர் எம்.ஏ. நகர் நல்லூர் ,காந்திநகர் ஆகிய பகுதிகளில் பகல் மற்றும் இரவு நேரங்களில் அடிக்கடி மின்தடை ஏற்படுகிறது இதனால் பொதுமக்கள் பெரிதும் பாதிப்பு ஏற்பட்டு உள்ளனர், அப்பகுதியில் உள்ள அரிசி ஆலைகளும் இயங்க முடியாமல் இருந்து வருகின்றன. எனவே மின்வாரியம் அடிக்கடி மின்தடையை சீர் செய்ய வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்