திருவள்ளூர் மாவட்டம் கடம்பத்தூர் பேரம்பாக்கம் கிராமத்தில் உள்ள பஸ் நிலையத்தில் பயணிகள் அமரும் இருக்கைகள் அனைத்தும் உடைந்து காட்சி பொருளாக ஒரு மூலையில் கிடைக்கிறது. இதனால் பஸ் நிலையத்திற்கு வரும் பெண்கள், முதியவர்கள், மாற்றுத்திறனாளிகள் அமர இடமில்லாமல் அவதிப்பட்டு வருகிறார்கள். எனவே பயணிகளின் வசதிக்காக பேரம்பாக்கம் பஸ் நிலையத்தில் இருக்கை வசதிகள் செய்து தர வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.