ஆபத்தான டிரான்ஸ்பார்மர்

Update: 2022-08-22 14:23 GMT

சென்னை கொளத்தூர் பூம்புகார் நகர் 1-வது மெயின் தெருவில் அமைந்துள்ள டிரான்ஸ்பார்மர் ஆபத்தான நிலையில் உள்ளது. பொதுமக்கள் கடந்து செல்லும் போது மின் இணைப்பு வயர்களை தாண்டி செல்ல வேண்டியுள்ளது. அதன் அருகிலேயே கால்வாய் தோண்டப்பட்டு இருப்பதால் மழை நிர் தேங்கி குளம் போல் காட்சியளிக்கிறது. இதற்கிடையே பொதுமக்கள் கடந்து செல்லும் அவல நிலை ஏற்படுகிறது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்