சென்னை மாத்தூர் எம்.எம்.டி.ஏ. 3வது பிரதான சாலை 97வது தெருவில் உள்ள மின் இணைப்பு பெட்டி திறந்தநிலையில் இருப்பது குறித்து 'தினத்தந்தி' புகார் பெட்டியில் செய்தி வெளியானது. இதையடுத்து மின்வாரிய அதிகாரிகள் விரைந்து செயல்பட்டு மின் இணைப்பு பெட்டி சரி செய்யப்பட்டது. இதற்காக மின் வாரிய அதிகாரிகளுக்கும் செய்தி வெளியிட்ட 'தினத்தந்தி'-க்கும் பொதுமக்கள் தங்களது நன்றிகளை தெரிவித்தனர்.