காஞ்சிபுரம் மாநகராட்சி சின்னய்யன் நகரில் உள்ள பூங்கா பராமரிப்பு இன்றி அவல நிலையில் உள்ளது. பூங்காவில் உள்ள நடைபாதைகள் அனைத்தும் புற்கள் நிறைந்து காணப்படுகிறது. எனவே பொதுமக்கள் பூங்காவிற்குள் நடத்து செல்ல அச்சப்படுகிறார்கள். பூங்காவை விரைவில் சுத்தம் செய்தால் காலை மாலை நடைபயிற்சி செய்வோர்களுக்கும் , குழந்தைகளுக்கும் பயனுள்ளதாக அமையும். எனவே துறை சார்ந்த அதிகாரிகள் பூங்காவை சுத்தம் செய்ய நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.