ஆரணி கோட்டை மைதானத்தின் மையத்தில் உயர் கோபுர மின் விளக்கு உள்ளது. அது, பல மாதங்களாக எரியவில்லை. அதைப் பழுதுப்பார்க்க கீழே இறக்கி வைத்தார்கள். பழுதுப்பார்த்தார்களா, இல்லையா? என்று தெரியவில்லை. உயர் கோபுர மின் விளக்கை விரைவில் சீரமைத்து எரிய விட அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?
-சோமசுந்தரம், ஆரணி.