வள்ளியூர் அருகே தளபதிசமுத்திரம் கோவனேரி வடக்குப்புற பஸ் நிறுத்தம் பகுதியில் பல ஆண்டுகளாக மின்விளக்கு அமைக்கப்படவில்லை. இதனால் இரவில் இருள் சூழ்ந்து காணப்படுவதால் பொதுமக்கள் வெளியில் செல்ல அச்சப்படுகின்றனர். வாகன விபத்துகளும் நிகழ்கின்றன. எனவே அங்கு மின்விளக்கு அமைக்க அதிகாரிகள் ஏற்பாடு செய்ய வேண்டுகிறேன்.