சீனப்புரம் ஊராட்சி சூரநாயக்கனூரில் கடந்த 6 மாதங்களாக தெரு விளக்குகள் எரிவதில்லை. இதனால் இரவு நேரங்களில் அந்த வழியாக செல்ல அச்சமாக உள்ளது. பாம்பு போன்ற விஷ ஜந்துகள் நடமாட்டம் காணப்படுகின்றன. விபத்துகளும் அதிகம் நடக்கின்றன. எனவே தெருவிளக்குகளை சரிசெய்ய அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?