வேலூர் சி.எம்.சி.மருத்துவமனை எதிரே ஆற்காடு சாலையில் காலை, மாலை நேரத்தில் கடும் போக்குவரத்து நெரிசல் உள்ளது. சாலையோரம் இருக்கும் மின்கம்பங்களும், டிரான்ஸ்பார்மரும் உள்ள இடங்களில் ஆக்கிரமிப்புகடைகள் செயல்படுவது இதற்கு காரணம். அங்கு வாகனங்களை நிறுத்தியும் ஆக்கிரமிப்பு செய்கிறார்கள். எனவே இரும்பு மின்கம்பங்கள், ஆக்கிரமிப்புகளை அகற்றி விட்டு, பூமிக்கடியில் மின் வழிப்பாதையை அமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?
-டேனியல், வேலூர்.