ஆரணி கோட்டை மைதானம் மையத்தில் உயர் கோபுர மின்விளக்கு உள்ளது. அது, சரியாக எரிவதில்லை. மேலும் ஆரணியில் பெரும்பாலான பகுதிகளில் உள்ள உயர் கோபுர மின்விளக்குகளில் ஒரு மின்விளக்கு மட்டுமே எரியும் நிலையில் மற்ற மின் விளக்குகளை சரியாக எரியவிடுவது இல்லை. இதனால் கோட்டை மைதானம் சமூக விரோதிகளின் கூடாரமாக மாறி வருகிறது. ஆரணியில் உள்ள உயர் கோபுர மின் விளக்குகளை முழுமையாக எரிய விட சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?
-புஷ்பராஜ், ஆரணி.