துணை மின் நிலையம் கட்டப்படுமா?

Update: 2023-08-09 17:51 GMT

வாலாஜா தாலுகாவில் வாலாஜாவை அடுத்த அம்மூர் மின் பிரிவுக்கு உட்பட்ட அம்மூர், வேலம், அனந்தலை, மேல்புதுப்பேட்டை, கீழ்புதுப்பேட்டை, லாலிகுப்பம், ரெட்டியூர், எடப்பாளையம் ஆகிய கிராமங்களில் குறைவான மின்னழுத்தமே உள்ளது. ஆகையால் புதிதாக துணை மின் நிலையம் அமைத்தால் மட்டுமே குறை தீரும். இதற்காக அம்மூர் சமத்துவபுரம் அருகே 3 ஆண்டுகளுக்கு முன்பு இடம் தேர்வு செய்யப்பட்டது. என்றாலும், இது நாள் வரை துணை மின்நிலையம் கட்டும் பணி தொடங்கப்படவில்லை. குறைவான மின் அழுத்தம் காரணமாக வீடுகளில் மின்சார சாதன பொருட்கள் பழுதடைகின்றன. எனவே மின்வாரியத்துறையினர் நடவடிக்கை எடுத்து அம்மூரில் துணை மின் நிலையம் அமைக்க முன்வர வேண்டும்.

-ராஜசிம்மன், வாலாஜா.

மேலும் செய்திகள்