வாணியம்பாடியில் இருந்து திருப்பத்தூர் வழியாக ஊத்தங்கரை வரை நான்கு வழி சாலையாக மாற்றப்பட்டுள்ளது. இதனால் திருப்பத்தூர் பகுதியில் சிக்னல்கள் அமைக்கப்படவில்லை. இதனால் திருப்பத்தூரில் டவுன் போலீஸ் நிலையம் எதிரே உள்ள இடத்தில் மற்றும் புதுப்பேட்டை ரோடு பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. உடனடியாக சம்பந்தப்பட்ட அதிகாரிகள் சிக்னல் விளக்குகளை அமைத்துத் தருவார்களா?
-மாது வழக்கறிஞர். ஆதியூர்.