திருவண்ணாமலை மாவட்டம் போளூர் தாலுகா கல்பட்டு ஊராட்சி இரும்புலி வேப்பங்கொட்டை செல்லியம்மன் கோவில் பகுதியில் கூட்டுப்பாதை செல்கிறது. அந்தச் சாலை கொளத்தூர் செல்லும் சாலை ஆகும். அந்தச் சாலை ஓரத்தில் ஒரு மின் கம்பம் உள்ளது. அது, வாகனப் போக்குவரத்துக்கு இடையூறாக உள்ளது. கட்டுப்பாட்டை இழக்கும் வாகனம் மின்கம்பத்தில் மோதி விபத்து நடக்கும் முன் கம்பத்தை சற்று தள்ளி நட வேண்டும்.
-திலகர், கல்பட்டு.