காட்பாடி-சித்தூர் நெடுஞ்சாலையில் வள்ளிமலை கூட்ரோடு பகுதியில் இருந்து அரசினர் ஆண்கள் மேல்நிலைப்பள்ளி வரையில் உள்ள கம்பங்களில் 10 மின் விளக்குகள் எரியவில்லை. மின் விளக்குகளை பராமரிக்கும் நிறுவனத்துக்கு பல முறை தகவல் தெரிவித்தும், அவர்கள் பழுதை சரி செய்யாமல் உள்ளனர். சம்பந்தப்பட்ட மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து நெடுஞ்சாலையில் எரியாத மின் விளக்குகளை எரியவிட நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் மாநகராட்சியில் பல்வேறு பகுதிகளில் பகல் நேரத்திலும் மின் விளக்குகள் எரிகின்றன. அதிகாலை நேரத்தில் மின் விளக்குகளை அணைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-பி.துரை, செங்குட்டை காட்பாடி.