வேலூர் மாவட்டம் காட்பாடி தாலுகா வள்ளிமலை சுப்பிரமணியசாமி கோவிலை சுற்றி 14 கிலோ மீட்டர் தொலைவிலான கிரிவலப்பாதை உள்ளது. கிரிவலப்பாதையில் மாதந்தோறும் பவுர்ணமி, கிருத்திகை, திருவிழா நாட்களில் பக்தர்கள் கிரிவலம் செல்கிறார்கள். கிரிவலப் பாதையானது மேல்பாடி, பெருமாள்குப்பம், வள்ளிமலை ஆகிய 3 கிராமப் பஞ்சாயத்துக்கு உட்பட்ட பகுதியாக உள்ளது. கிரிவலப்பாதையில் உள்ள மின் விளக்குகள் சரியாக எரிவதில்லை. மின் விளக்குகளை எரியவிட சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடடிவக்கை எடுக்க வேண்டும்.
-பிச்சமுத்து, வள்ளிமலை.