அரக்கோணம் தாலுகா மோசூர் ரெயில்வே கேட்டில் இருந்து அரக்கோணம் செல்லும் சாலையில் குறுகலான வளைவு உள்ளது. அந்த வளைவு பகுதியில் தெரு மின் விளக்கு வசதி இல்லாததால் இரவில் இருள் சூழ்ந்து காணப்படுகிறது. இதனால் அங்கு விபத்துகள் நடக்கின்றன. எனவே மோசூர் ஊராட்சி மன்ற நிர்வாகம் உடனடியாக தெரு மின் விளக்கு வசதியை ஏற்படுத்தி தருவார்களா?
-குமார், மோசூர்.