புதிய மின்கம்பம் நடப்படுமா?

Update: 2023-05-24 12:38 GMT

கண்ணமங்கலம் பகுதியில் பல்வேறு தெருக்கள் குறுகலாக உள்ளன. அதில் வாகனங்கள் செல்ல முடியாமல் அவதிப்பட்டு வரும் நிலை உள்ளது. கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு பெருமாள் கோவில் அருகில் உள்ள மின் கம்பம் மீது லாரி மோதியதில், அந்தக் கம்பத்தை மாற்றாமல் மின் வாரியத்துறையினர் பழுதடைந்த கம்பத்துக்கு கான்கிரீட் கலவை பூச்சு செய்தனர். அந்தத் தெரு மிகக் குறுகிய தெருவாக இருப்பதால், புதிய மின் கம்பம் நடப்படுமா?

-தாமோதரன், கண்ணமங்கலம்.

மேலும் செய்திகள்