வலுவிழந்த மின்கம்பங்களை மாற்ற வேண்டும்

Update: 2024-07-28 19:39 GMT

செங்கம் மற்றும் சுற்று வட்டாரப் பகுதிகளில் உள்ள மின் கம்பங்கள் அதனுடன் இணைக்கப்பட்ட மின் கம்பிகள் பல்வேறு இடங்களில் வலுவிழந்து காணப்படுகின்றன. அதில் கரியமங்கலம், அண்டப்பேட்டை, முறையாறு, சொர்ப்பனந்தல், அரட்டவாடி உள்பட சில இடங்களில் மின்கம்பங்கள் வலுவிழந்துள்ளன. இவை எப்போது வேண்டுமானாலும் கீழே விழலாம். செங்கம் பகுதியில் பல்வேறு இடங்களில் உள்ள வலுவிழுந்து காணப்படும் மின் கம்பங்கள், கம்பிகளை மின்வாரியத்துறையினர் உடனடியாக அகற்றி விட்டு, புதிதாக கம்பிகள், கம்பங்கள் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-சந்தோஷ், செங்கம். 

மேலும் செய்திகள்