திருப்பத்தூர் நகராட்சிக்கு உட்பட்ட பாரதி ரோடு பகுதியில் ஏராளமான குடியிருப்புகள் பள்ளி, வணிக வளாகங்கள் உள்ளன. இப்பகுதியில் 5-க்கும் மேற்பட்ட மின்கம்பங்களில் கடந்த 45 நாட்களாக மின்விளக்குகள் எரியவில்லை. இதனால் இரவில் அப்பகுதியில் இருள் சூழ்ந்து காணப்படுகிறது. இருளில் சமூக விரோத செயல்கள் நடக்கும் நிலை உள்ளது. எனவே தெருவிளக்குகளை எரிய விட நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-தட்சிணாமூர்த்தி, திருப்பத்தூர்.