காவேரிப்பாக்கத்தில் சென்னை-பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையின் மையப் பகுதியில் உயர் கோபுர மின் விளக்கு மற்றும் சாலையோர மின் விளக்குகள் அமைக்கப்பட்டன. இவை ஒருசில இடங்களில் மட்டும் எரிகின்றன. மற்ற இடங்களில் மின் விளக்குகள் எரியவில்லை. காவேரிப்பாக்கத்தை அடுத்த கொண்டாபுரம் பகுதியில் உள்ள பஞ்சலிங்கேஸ்வரர் கோவில் எதிரே அமைக்கப்பட்ட உயர் கோபுர மின் விளக்கு மற்றும் மேம்பாலம் வரை உள்ள சாலை ஓர மின் விளக்குகள் பல மாதங்களாக எரியாமல் உள்ளன. இதனால் அப்பகுதியில் இருளாக உள்ளது. உயர் கோபுர மின் விளக்குகள் மற்றும் சாலை ஓரங்களில் எரியாமல் இருக்கும் விளக்குகளை எரியவிட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-ராம்குமார், காவேரிப்பாக்கம்.