அரக்கோணம் தாலுகா பெருமுச்சி ஊராட்சி வெங்கடேசபுரம் டிரான்ஸ்பார்மர் 3-வது தெருவில் இரும்பு மின்கம்பம் சாய்ந்த நிலையில் உள்ளது. அந்தக் கம்பம் எந்த நேரத்திலும் கீழே விழும் ஆபத்து உள்ளது. மின்கம்பத்தை சரியாக நிறுவ வேண்டும் என பல முறை மின்வாரிய அதிகாரிகளிடம் எடுத்துக்கூறியும் கண்டு கொள்ளாமல் உள்ளனர். அசம்பாவிதம் நடக்கும் முன் சாய்ந்த நிலையில் இருக்கும் இரும்பு மின்கம்பத்தை நேராக அமைக்க வேண்டும்.
-அப்துல் கவுஸ், அரக்கோணம்.