பாணாவரத்தில் ரெயில்வே மேம்பாலம் உள்ளது. மேம்பாலத்தின் வழியாக தினமும் சோளிங்கர், அரக்கோணம், சென்னை, சித்தூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு அரசு, தனியார் பஸ்கள், கார்கள், இருசக்கர வாகனங்களில் சென்று வருகின்றனர். மேம்பாலத்தின் இருபுறமும் மின் விளக்குகள் அமைக்கப்பட்டுள்ளன. ஆனால் மின் விளக்குகள் எரிவதில்லை. இதனால் அடிக்கடி விபத்துகள் ஏற்படுகின்றன. மேம்பாலத்தில் மின்விளக்குகளை எரியவிட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-சுகுமார், பாணாவரம்.