சோளிங்கர் பஸ் நிலையத்துக்கு அரக்கோணம், வாலாஜா, ராணிப்பேட்டை, வேலூர், பொன்னை, சித்தூர், திருத்தணி, பள்ளிப்பட்டு ஆகிய ஊர்களில் இருந்து பலர் வந்து செல்கின்றனர். அங்கு உயர் கோபுர மின்விளக்கு அமைக்கப்பட்டுள்ளது. அதில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு 6 விளக்குகளில் 2 விளக்குகள் மட்டுமே எரிந்தன. கடந்த 2 வாரங்களுக்கு மேலாக ஒரு மின் விளக்கு மட்டுமே எரிகிறது. போதிய வெளிச்சம் இல்லாததால் பஸ் நிலையம் இருளில் மூழ்கி உள்ளது. எரியாத மின் விளக்குகளை எரியவிட நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பரசுராமன், சோளிங்கர்