வேலூர் சேண்பாக்கம் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள அனைத்து மின் விளக்குகளும் கடந்தசில நாட்களாக எரியவில்லை. தேசிய நெடுஞ்சாலையில் எரியும் மின் விளக்குகளின் வெளிச்சம் சர்வீஸ் சாலை வரை இருக்கும். ஆனால், தற்போது மின் விளக்குகள் எரியாததால், சர்வீஸ் சாலை இருள் சூழ்ந்து காணப்படுகிறது. தேசிய நெடுஞ்சாலை நிர்வாகம் மின் விளக்குகளை எரியவிட நடவடிக்கை எடுக்குமா?
-அ.பன்னீர்செல்வம், சேண்பாக்கம்.