போளூர் அல்லி நகரில் இருந்து அத்திமூர் செல்லும் சாலையில் ஒரு கிலோ மீட்டர் தொலைவில் அரசு பொது மருத்துவமனை இயங்கி வருகிறது. அங்கு பாம்பு கடி, விஷ கடி, விபத்து, அறுவை சிகிச்சை போன்ற முக்கிய நோய்களுக்கு சிகிச்சை அளிப்படுகிறது. இரவில் போளூர் அல்லி நகரில் இருந்து மருத்துவமனைக்கு செல்லும் வழியில் மின்விளக்குகள் எரியவில்லை. இரவில் பொதுமக்கள், நோயாளிகள் மருத்துவமனைக்கு செல்ல சிரமப்படுகின்றனர். உடனடியாக போளூர் பேரூராட்சி நிர்வாகம் மருத்துவமனைக்கு செல்லும் சாலையில் மின் விளக்குகளை எரியவிட வேண்டும்.
-சரவணன், போளூர்.