வேலூர் மாவட்டம் ஊசூரில் ஆரம்ப சுகாதார நிலையம் உள்ளது. இங்கு சுற்று வட்டாரக் கிராமங்களை சேர்ந்த மக்கள் வந்து சிகிச்சை பெற்று செல்கின்றனர். ஆரம்ப சுகாதார நிலைய வளாகத்தில் பொதுமக்கள் வசதிக்காக அமைக்கப்பட்டுள்ள மின்விளக்குகள் கடந்த 2 வாரமாக எரியவில்லை. இதனால் மருத்துவமனை வளாகம் இருண்டு காணப்படுகிறது. இரவில் வந்து செல்லும் பார்வையாளர்கள், நோயாளிகள் வெளிச்சம் இல்லாமல் மிகவும் சிரமப்படுகின்றனர். எனவே பொதுமக்களின் நலன் கருதி, மின்விளக்குகளை சரி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-குமார், ஊசூர்.