மின் விளக்குகள் எரியவில்லை

Update: 2022-09-04 14:45 GMT

ஆற்காடு நகரில் போக்குவரத்து நெரிசலை குறைக்க பஸ் நிலையத்தில் இருந்து தேசிய நெடுஞ்சாலை வரை 70 அடி அகல சாலை அமைக்கப்பட்டது. இந்தச் சாலை அமைக்கப்பட்டதால் போக்குவரத்து நெரிசல் ஓரளவு குறைந்து காணப்படுகிறது. இந்தநிலையில் ஆற்காடு பஸ் நிலையத்தில் இருந்து 70 அடி அகல சாலையில் பாதி தூரம் வரை மின்விளக்குகள் எரியவில்லை. இதனால் இரவில் இருள் சூழ்ந்து காணப்படுகிறது. விபத்து ஏற்படும் சூழல் மற்றும் திருட்டுச் சம்பவங்கள் நடக்க வாய்ப்புள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து மின் விளக்குகளை எரியவிடுவார்களா?

-அப்துல்வகாப், ஆற்காடு. 

மேலும் செய்திகள்