மின் விளக்கு எரியவில்லை

Update: 2023-05-24 12:32 GMT

போளூரில் இருந்து வேலூர் செல்லும் சாலையில் எட்டிவாடி அருகில் பைபாஸ் சாலையில் ஒரு மாதமாக இரவில் மின் விளக்கு எரியவில்லை. இதனால் வாகன ஓட்டிகள் மிகவும் சிரமத்துக்கு ஆளாகி வருகின்றனர். ஏற்கனவே அந்த இடம் அடிக்கடி விபத்து ஏற்படும் பகுதி என்று அனைவருக்கும் தெரியும். இதை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் சரி செய்ய வேண்டும்.

-பாண்டியன், போளூர்.

மேலும் செய்திகள்