அரக்கோணத்தில் திருத்தணி சாலையில் தாலுகா அலுவலகம், நகராட்சி அலுவலகம், துைண போலீஸ் சூப்பிரண்டு அலுவலகம், காவலர் குடியிருப்பு, தாலுகா அலுவலக பஸ் நிறுத்தம் ஆகியவைகள் உள்ளன. தாலுகா அலுவலக நுழைவு வாயில் அருகே உள்ள மின் கம்பத்தில் மின் விளக்கு 10 நாட்களுக்கு மேலாக எரியவில்லை. அப்பகுதியில் இருள் சூழ்ந்து காணப்படுகிறது. பிராதான சாலைகளில் உள்ள மின் கம்பங்களிலும் மின் விளக்குகள் எரியவில்லை. எரியாத மின் விளக்குகளை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் எரியவிட ேவண்டும்.
-சீனிவாசன், சமூக ஆர்வலர், அரக்கோணம்.