அரக்கோணம் சுவால்பேட்டையில் உள்ள பிரசித்தி பெற்ற சுந்தர விநாயகர் கோவில் அருகில் உயர் கோபுர மின் விளக்கு உள்ளது. அது, பல மாதங்களாக எரியவில்லை. இதுகுறித்து நகராட்சி நிர்வாகத்துக்கு தகவல் தெரிவித்தும், அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை. அந்தப் பகுதி முழுவதும் இரவில் இருள் சூழ்ந்து காணப்படுகிறது. கோவிலுக்கு வரும் பக்தர்களும் சிரமப்படுகின்றனர். சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து உயர் கோபுர மின் விளக்கை எரியவிட வேண்டும்.
-உதயகுமார், அரக்கோணம்.