சோளிங்கர் அரசு மருத்துவமனைக்கு ராணிப்பேட்டை, சித்தூர், திருவள்ளூர், வேலூர் ஆகிய பகுதிகளில் இருந்து மகப்பேறு, விபத்து, காய்ச்சல், பாம்பு கடி நாய்க்கடி போன்றவற்றுக்காக சிகிச்சை பெற வருகிறார்கள். மருத்துவமனை வளாகத்தில் உள்ள உயர் கோபுர மின்விளக்கு எரியவில்லை. இதனால் நோயாளிகள், உதவியாளர்கள் அவதிப்படுகின்றனர். இருசக்கர வாகனங்கள் திருட்டுப் போகின்றன. எனவே உயர்கோபுர மின் விளக்கை எரியவிட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-கண்ணன், சோளிங்கர்.