மின்கம்பத்தை ஓரமாக நட வேண்டும்

Update: 2025-05-25 19:19 GMT

வேலூர் கோட்டை சுற்றுச்சாலையில் உள்ள முனீஸ்வரன் கோவில் அருகே வாகன ஓட்டிகளுக்கு இடையூறாக மின்கம்பம் உள்ளது. அந்த மின்கம்பத்தை சற்று நகர்த்தி நடைபாதை ஓரம் நட்டால் வாகன ஓட்டிகளுக்கு எந்த ஒரு இடையூறும் ஏற்படாது. இரவில் மோட்டார் சைக்கிளில் செல்பவர்கள் திடீரென மின்கம்பத்தின் மீது மோதி செல்லும் நிலை உருவாகிறது. மின் கம்பத்தை ஓரமாக நடுவது குறித்து சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-தருமலிங்கம், வேலூர். 

மேலும் செய்திகள்