நாட்டறம்பள்ளி பேரூராட்சி 14-வது வார்டில் தம்மா தெருவில் மாநில நெடுஞ்சாலையில் மின்கம்பிகள் தாழ்வாக 10 அடி உயரத்தில் இருந்தன. அந்த வழியாக செல்லும் பள்ளி பஸ் மற்றும் அரசு பஸ்கள் பல நேரங்களில் மின் கம்பிகள் மீது உரசின. அசம்பாவிதம் தவிர்க்கும் வகையில் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என தினத்தந்தி புகார் பெட்டியில் செய்தி வெளியானது. அந்தச் செய்தி எதிரொலியாக மின் வாரியத்துறை அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை மேற்கொண்டு தாழ்வாக தொங்கிய மின் கம்பிகளை மேலே உயர்த்தி கட்டி உள்ளனர். இதுகுறித்து நடவடிக்கை எடுத்த அதிகாரிகளுக்கும், செய்தி வெளியிட்ட தினத்தந்திக்கும் பொதுமக்கள் நன்றியை தெரிவித்தனர்.
-இல. குருசேவ், பேரூராட்சி கவுன்சிலர், நாட்டறம்பள்ளி.