வேலூர் தோட்டப்பாளையம் பாலாஜி நகர் 4-வது தெருவில் உள்ள அங்கன்வாடி மையம் அருகே மின்சார டிரான்ஸ்பார்மர் உள்ளது. அதனை சுற்றி செடிகள் வளர்ந்து காணப்பட்டது. அவற்றை சுத்தம் செய்ய வேண்டும் என தினத்தந்தியில் செய்தி வெளியிடப்பட்டது. அதனை பார்த்து அதிகாரிகள் டிரான்ஸ்பார்மரை சுற்றியுள்ள செடிகளை அகற்ற நடவடிக்கை எடுத்தனர். இது குறித்து அப்பகுதி மக்கள் செய்தி வெளியிட்ட தினத்தந்திக்கும் நடவடிக்கை எடுத்த அதிகாரிகளுக்கும் நன்றி தெரிவித்தனர்.
ேமாகன்ராஜ், ேவலூா்