மேம்பாலங்களில் மின்விளக்குகள் எரியவில்லை

Update: 2026-06-14 19:54 GMT

ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கர்-திருத்தணி சாலையில் உள்ள நந்தியாற்று பாலத்தில் மின்விளக்குகள் உள்ளன. அவை, ஒரு மாதத்துக்கும் மேலாக எரியவில்லை. இதனால் சோளிங்கரில் இருந்து திருத்தணி, பள்ளிப்பட்டு, நகரி ஆகிய பகுதிகளுக்கு செல்லும் வாகன ஓட்டிகள் அவதிப்படுகின்றனர். பாலத்தில் விபத்துகளும் நடக்கின்றன. மின் விளக்குகள் எரியாததை பயன்படுத்தி ஆற்றில் மணல் கொள்ளையும் நடக்கிறது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து நந்தியாற்று மேம்பாலத்தில் மின்விளக்குகளை எரியவிட வேண்டும்.

-பார்த்தசாரதி, சோளிங்கர்.

மேலும் செய்திகள்