ஆரணி நகராட்சி 4-வது வார்டு புதுக்காமூர் சாலையில் இருந்து எஸ்.வி. நகரம் செல்லும் சாலையில் தெரு மையத்தில் 2 மின்கம்பங்கள் உள்ளன. அவை போக்குவரத்துக்கு இடையூறாக உள்ளது. கனரக வாகனங்கள் தெருக்களில் செல்ல முடியாத நிலை உள்ளது. அந்த மின்கம்பங்களை சாலையோரம் அமைக்க மின்வாரியத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?
-பிரான்சிஸ் சேவியர், ஆரணி.