மின்கம்பம் சேதம்

Update: 2023-10-29 17:06 GMT

கே.வி.குப்பம் ஒன்றியம் லத்தேரி ஊராட்சிக்கு உட்பட்ட அருந்ததிய மக்கள் வாழும் பகுதியில் ஒரு மின்கம்பம் சேதம் அடைந்துள்ளது. இதனால் தெருவில் குழந்தைகள் விளையாட அச்சப்படுகின்றனர். மழைக்காலத்தில் மின்கம்பத்தில் மின்கசிவு ஏற்பட்டு ஆபத்து நடக்கலாம். சேதம் அடைந்த மின்கம்பத்தை மாற்றி விட்டு புதிய கம்பம் நட மின்வாரியத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-ராஜா, லத்தேரி. 

மேலும் செய்திகள்