தச்சம்பட்டு அருகில் உள்ள தலையாம்பள்ளம் தெற்கு தெரு செல்லும் சாலை அருகே உயர் மின்னழுத்த மின் கம்பிகளை கொண்ட கம்பம் உள்ளது. அதில் உள்ள சிமெண்டு பூச்சு முழுவதும் பெயர்ந்து இரும்புக்கம்பிகள் வெளியே தெரிகிறது. காற்று அடித்தால் கீழே விழுந்து விடும் அபாயம் உள்ளது. சேதமான மின்கம்பத்தை அகற்றி விட்டு புதிய கம்பம் நட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-நாதன், தச்சம்பட்டு.