ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கர் ஒன்றியம் தலங்கை ெரயில் நிலையம் அருகில் உள்ள கோவிந்தராஜபுரம் பள்ளிக்கூட தெருவில் மின்கம்பம் பராமரிப்பின்றி சிதிலமடைந்துள்ளது. இ்ந்த மின்கம்பம், மக்கள் குடியிருப்புக்கு அருகில் உள்ளதால் எந்த நேரத்திலும் உடைந்து கீழே சாய்ந்து விடும் அபாயம் உள்ளது. சம்பந்தப்பட்ட மின்வாரியத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து சிதிலமடைந்த மின்கம்பத்தை மாற்றியமைக்க வேண்டும்.
-மணிகண்டன், கோவிந்தராஜபுரம்.