பாணாவரத்தை அடுத்த வீரராகவபுரம் கிராமம் பஜனை கோவில் பின்பக்கம் உள்ள விவசாய நிலங்களுக்கு மத்தியில் செல்லும் மின் கம்பிகள் தாழ்வாக கைக்கு எட்டும் உயரத்தில் உள்ளது. இதனால் அந்த வழியாக விவசாய பணிகளுக்காக டிராக்டர், அறுவடை எந்திரங்கள் உள்ளிட்ட வாகனங்கள் செல்ல முடியாமல் விவசாயிகள் அவதிப்படுகின்றனர். எனவே விவசாயிகள் நலன் கருதி சம்பந்தப்பட்ட மின்வாரிய அதிகாரிகள் மின்கம்பிகளை சற்று மேலே உயர்த்தி கட்ட வேண்டும்.
சுனில் வீரராகவபுரம்.