தண்டராம்பட்டு ஒன்றியம் சதாகுப்பம் கிராம பகுதிகளில் விவசாய நிலம் வழியாக செல்லும் மின் கம்பிகள் மிகவும் தாழ்வாக உள்ளன. இதனால் கரும்பு பாரம் ஏற்றிய லாரி, டிராக்டர் ஆகிய வாகனங்கள் செல்ல சிரமமாக உள்ளன. கரும்புத்தோட்டத்துக்குள் செல்லும் மின்கம்பிகள் காற்று வீசும்போது ஏற்படும் உராய்வினால் தீப்பொறி ஏற்பட்டு கரும்புத்தோட்டம் தீப்பிடித்து எரிகிறது. இதுபோன்ற பிரச்சினைகளை தவிர்க்க தாழ்வாகச் செல்லும் மின் கம்பிகளை சற்று உயர்த்தி கட்ட வேண்டும்.
-நாதன், சதாகுப்பம்.