மின்கம்பங்கள், டிரான்ஸ்பார்மர்களை ஓரமாக அமைக்க ேவண்டும்

Update: 2022-08-24 12:08 GMT

வேலூர்-ஆற்காடு சாலை, போக்குவரத்து நெரிசலால் திணறி வருகிறது. சாலையோரம் உள்ள கடைக்காரர்கள் ஆக்கிரமிப்பு செய்திருந்தனர். அந்த ஆக்கிரமிப்புகள் கடந்த சில மாதங்களுக்கு முன்பு அகற்றப்பட்டது. எனினும் மீண்டும் தற்போது தற்காலிக கடைகள், தள்ளுவண்டி கடைகள் ஆக்கிரமிப்பு செய்துள்ளனர். இதற்கு ஒரு காரணமாக மின்கம்பங்கள், டிரான்ஸ்பார்மர்கள் உள்ளன. இதை சாதகமாக பயன்படுத்தி தான் ஆக்கிரமிப்பு கடைகள் நடந்து வருகின்றன. எனவே மின்கம்பங்கள், டிரான்ஸ் பார்மர்களை இடமாற்றி ஓரம் அமைக்க வேண்டும். மேலும் சாலையை விரிவுபடுத்தி ஆக்கிமிரப்பு செய்வதை தடுக்க வேண்டும்.

சுப்பிரமணியம், வேலூர்.

மேலும் செய்திகள்