ராசிபுரம் டவுன் அண்ணா சாலையில் உள்ள யூனியன் அலுவலகம் அருகே இருந்து செல்லும் வழியில் பயணியர் விடுதி, அரசு மேல்நிலைப்பள்ளி, தாலுகா அலுவலகம் உள்ளன. இங்குள்ள தெருவிளக்குகள் இரவு நேரங்களில் சரிவர எரிவதில்லை. இதனால் விடியற்காலை நடை பயிற்சி செல்பவர்கள் மிகவும் சிரமப்படுகின்றனர். வயதானவர்கள் கீழே விழுகின்றனர். எனவே தெருவிளக்குகளை உடனடியாக சரி செய்ய வேண்டும்.