சிவகங்கை மாவட்டம் கல்லல் ஊராட்சி புரண்டி கிராமத்தில் உள்ள முக்கிய சாலைகளில் கடந்த சில நாட்களாக சில மின்விளக்குகள் சரியாக எரியாமல் உள்ளது. இதனால் இரவு நேரங்களில் அப்பகுதி இருள் சூழ்ந்து காணப்படுவதால் அச்சமயம் அந்த வழியே செல்லும் பொதுமக்கள், வாகனஓட்டிகள் மிகவும் சிரமமடைகின்றனர். மேலும் இதனால் அப்பகுதி குடியிருப்பு வாசிகளிடையே திருட்டு அச்சம் எழுந்துள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் பழுதான மின்விளக்குகளை சீரமைக்க நடவடிக்கை எடுப்பார்களா?