திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிபூண்டி கோட்டகரை பஸ் நிறுத்தம் அருகில் உள்ள மின் கோபுர விளக்கில் ஒரு விளக்கு மட்டும் எரிகிறது. இதனால் அந்த சாலையில் போதிய வெளிச்சம் இல்லை. அடிக்கடி விபத்து ஏற்படுவதோடு, குற்றச்சம்பவங்களும் அரங்கேறுகிறது. இதுகுறித்து, மின்வாரிய துறை அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.